OUR CLIENTS
2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் அவதி
2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் அவதி Posted on 04-Jul-2019 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் அவதி


கோயம்புத்தூர், ஜூலை 4-
 கோயம்புத்தூர்  - சென்னை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு கிளம்புவது வழக்கம். இதனால், நேற்று காலை அந்த ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகள் அதிகாலை முதலே வந்து ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால், ரயில் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியும் ரயில் வராததால், கோமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் பெட்டி இணைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி அதிகாரிகள் சமரசப்படுத்தினர். பின்னர் கோவை ரயில் நிலையத்திற்குள் வந்த ரயில் 8.15 மணியளவில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

Label