விநாயகர் சதுர்த்தி நாளில் வானில் தோன்றிய பிள்ளையார் Posted on 06-Sep-2016
கொழும்பு:
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்களும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இலங்கை தமிழர் பகுதியான மட்டக்களப்பில் விநாயகர் வானில் தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. வானில் மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு மேல் எழுந்து வந்தன. அதில், ஒரு மேக கூட்டம் விநாயகர் போல் தெரிந்தது.
விநாயகர் சதுர்த்தி நாளில் இப்படியொரு காட்சி வானில் தெரிந்ததால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர்.
சாலையில் செல்வோர் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகர் உருவத்தை நோக்கி வணங்கினார்கள். சிலர் பூஜைகளும் செய்தனர். பல நிமிடங்களுக்கு இந்த காட்சி வானில் தெரிந்தது. பின்னர் மேக கூட்டம் கலைந்து சென்றது.
வானில் பிள்ளையார் தோன்றியது பற்றி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.