OUR CLIENTS
குடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை!
குடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை! Posted on 04-Jul-2019 குடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை!


ராமநாதபுரம், ஜூலை 4-
குடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் குடங்களுடன் அலைகின்றனர். நகர்புறத்தில் விற்பனை செய்யப்படும் கேன் குடிநீர் தற்போது கிராமங்களிலும் 20 லீட்டர் ரூ.40 முதல் 60 வரை விற்பனை செய்கின்றனர். 

சில நிறுவனங்கள் தண்ணீர் கேன்களை டோர் டெலிவரியாக வழங்குகின்றன. மக்களின் அதிகமான தேவையை பயன்படுத்தி மாவட்டத்தில் பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. முறையான அனுமதி பெறாமலும் தரமற்ற முறையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் குடிசை தொழிலாக மாறி வரும் தண்ணீர் விற்பனை தெருவுக்கு தெரு மற்றும் எல்லா கிராமங்களிலும் 
விற்பனை செய்கின்றனர். விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள், கேன்களில் தயாரிக்கும் நிறுவன பெயர் விபரங்கள் இல்லாத நிலையில் உள்ளது.

தண்ணீர் கிடைக்காத கிராமங்களில் அதிக டிமாண்ட் உள்ளதால் மக்கள் தேவையை பயன்படுத்தி சிலர் விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கேன், பாட்டில்களில் உள்ள நீரை குடித்தால் பல வகையான உடல் உபாதைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் புற்றீசல் போல் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றியுள்ள நிலையில், அவை முறையான அனுமதி பெற்றுள்ளதாக என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு கேன் மற்றும் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முழு முகவரி, தரச்சான்று, ஐஎஸ்ஐ எண்களையும் தயாரித்த நாள், காலாவதியாகும் நாள் என அனைத்தையும் பாட்டில், கேன்களில் பிரிண்ட் செய்திருக்க வேண்டும். 

அனுமதி பெற்று நடத்தப்படும் நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தாத நிலையில், மாவட்டத்தில் பல போலியான குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமலேயே தரமற்ற குடிநீரை விற்பனை செய்து வருகின்றன. பாட்டில்களில் தினமும் ஒரு பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான பாட்டில் தண்ணீரை குடித்தால் ஒருவிதமான வாடை வருகிறது. இதனால் தாகத்திற்காக சிறிதளவு மட்டும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு கீழே கொட்டும் நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாறுதலில் சென்று விட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார், போதிய அலுவலர்கள் இல்லாத நிலையில் முறையாக ஆய்வு நடத்த முடியவில்லை என தெரிவிக்கினறனர். 

பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் வருவாய் துறை, உள்ளாட்சி துறை நகராட்சிதுறை அதிகாரிகள் மூலம் பாட்டில்கள் கேன்களில் குடிநீர் விற்பனை செய்யும நிறுவனங்களை ஆய்வு நடத்த வேண்டும என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை பொதுமக்கள் லீttஜீt:/sணீயீமீஷ்ணீtமீக்ஷீயீssணீவீ.ரீஷீஸ்.வீஸீ//நீறீமீணீஸீஷ்ணீtமீக்ஷீ/லீஷீனீமீ என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம். விற்பனை செய்யப்பட்டும் பாட்டில்கள் கேன்களில் ஐஎஸ்ஐ எண் உணவு பாதுகாப்பு உரிம எண் தயாரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை அறிக்கை, தயாரித்த நிறுவனத்தின் ஐஎஸ்ஐ எண், எந்த நாள் வரை பயன்படுத்த, நாள் விபரங்கள் இவற்றை அறிந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு தண்ணீர் பாட்டிலும் அதன் தயாரிப்பு நிறுவனத்தில் ஐஎஸ்ஐ எண் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல்கள் இல்லாத பாட்டில்கள் போலியானவையாகும். இரண்டு எண்களில் ஏதாவது ஒரு எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் நிறுவனத்தின் முழுவிபரங்களை அறிந்து கொள்ளலாம். போலியானவை என்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் என்றார்.

Label