OUR CLIENTS
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு!
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு! Posted on 04-Jul-2019 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு!


தருமபுரி, ஜூலை 4-
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சரளமாக புழங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் பெயரளவில் ஆய்வு நடத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜன.,1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க உத்தர விட்டுள்ளது. இந்நிலையி, தருமபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஜோராக நடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள், பெயரளவுக்கு ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Label