OUR CLIENTS
எச்1-பி விசா முறைகேடு - 4 இந்தியர்கள் கைது
எச்1-பி விசா முறைகேடு - 4 இந்தியர்கள் கைது Posted on 04-Jul-2019 எச்1-பி விசா முறைகேடு - 4 இந்தியர்கள் கைது

வாஷிங்டன், ஜூலை 4-
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ (வயது 39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னாண்டோ சில்வா (53) மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சதீஸ் வெமுரி (52) ஆகிய 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் 4 பேரும் எச்1-பி விசா திட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது, ரகசிய விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, இவர்கள் தங்களின் நிறுவனங்களுக்கு எச்1-பி விசா மூலம் ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள்.

இந்த மோசடி தொடர்பாக விஜய் மனோ உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இது தொடர்பாக வழக்கு விசாரணை நியூஜெர்சி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் அவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2½ லட்சம் டாலர்கள் (ரூ.1 கோடி யே 72 லட்சம்) அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Label