OUR CLIENTS
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 584 பேருக்கு பணிநியமன ஆணை
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 584 பேருக்கு பணிநியமன ஆணை Posted on 05-Jul-2019 மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 584 பேருக்கு பணிநியமன ஆணை

சென்னை, ஜூலை 5-

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 584 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்.

பொது சுகாதாரத்துறையில் 584 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் அந்தத் துறையில் காலிப்பணியிடங்களே இல்லாத சூழல் உருவாக்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 584 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Label