OUR CLIENTS
தேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு 1 ஆண்டு சிறை
தேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு 1 ஆண்டு சிறை Posted on 05-Jul-2019 தேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு 1 ஆண்டு சிறை

சென்னை, ஜூலை 5-

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2009-ஆம் ராணி சீதை மன்றத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய வைகோ மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும் பேசியதாகக் கூறி தேச துரோக குற்றம், மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு என இரு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நடைமுறைகள் முடிந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். வைகோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, வைகோவை குற்றவாளி என அறிவிப்பதாக கூறினார். வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டார். 

தண்டனை நிறுத்திவைக்கப்படுவதன் மூலம் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதையோ, மாநிலங்களவை உறுப்பினராவதையோ தீர்ப்பு பாதிக்காது என மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார். மேலும், மேல்முறையீட்டின் போது வைகோ விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

Label