OUR CLIENTS
புயலால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் புதைவட கம்பிகள் பொருத்தப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்
புயலால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் புதைவட கம்பிகள் பொருத்தப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல் Posted on 05-Jul-2019 புயலால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் புதைவட கம்பிகள் பொருத்தப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை, ஜூலை 6-

புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, இன்று கேள்வி நேரத்தில் பேசிய செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு, செய்யூர் தொகுதியில் 16 மீனவ கிராமங்கள் உள்ளதாகவும், அங்கு அடிக்கடி மின் விநியோகம் தடைப்படுவதாகவும் அதற்கு தீர்வு காண புதைவட கம்பி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்தார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,

அதிகமாக காற்று வீசக்கூடிய, புயலால் பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மீனவ கிராமங்களில் கடல் காற்று மற்றும் வெயிலின் காரணமாக இன்சுலேட்டர் வயர் கீரல் விழுந்து வெடித்து விடுவதால் மின் விநியோகம் தடைப்படுவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் இன்சுலேட்டர் ஒயர்களுக்கு பதிலாக பாலிமர் ஒயர்கள் மாற்றப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Label