OUR CLIENTS
தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்
தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் Posted on 07-Jul-2019 தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்


 சென்னை, ஜூலை 07-
தமிழ்நாடு முழுவதும், நாளை முதல், தண்ணீர் எடுக்கப்போவதில்லை, தண்ணீர் விநியோகம் இல்லை  என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.அரசு அதிகாரிகள்  தனியார் தண்ணீர் லாரிகளை, சிறைபிடிப்பதை கண்டித்து, 25,000 தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்திருக்கிறது.

சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் நிஜலிங்கம் பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உட்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
 
தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்துவிடுவதாகவும், லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவதாகவும், பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசின் முறையான அனுமதி கிடைக்கும் வரை, நாளை முதல் தண்ணீரை எடுக்கப் போவதில்லை எனவும்
நாளை முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Label