OUR CLIENTS
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்
தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் Posted on 07-Jul-2019 தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

கலிபோர்னியா, ஜூலை 7-
கலிபோர்னியாவில் அடுத்தடுத்த நாட்களில் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், சேத மதிப்புகளை கணக்கிடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரிட்ஜ்கிரஸ்ட் நகருக்கருகில் வியாழக்கிழமை பிற்பகலில் 6.4 ரிக்டர் அளவில், முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முந்தைய நிலநடுக்கத்தை விட 2வது நிலநடுக்கம் 10 மடங்கு சக்திவாய்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு கலிபோர்னியா முழுவதும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள், மதுபாட்டில்கள் தரையில் விழுந்து நாசமாகின.

இந்நிலையில் தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபடும் குழுவினர், சேதமடைந்த கட்டிடங்கள், சாலைகள், நீர் மற்றும் எரிவாயு இணைப்புகள், இதர உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே ஆங்காங்கே ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான தண்ணீர் மற்றும் எரிவாயு கசிவு ஆகியவற்றை சரிசெய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Label