OUR CLIENTS
ரஷ்யா-சிரியா கூட்டு ராணுவம் தாக்குதல்- 544 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்
ரஷ்யா-சிரியா கூட்டு ராணுவம் தாக்குதல்- 544 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் Posted on 07-Jul-2019 ரஷ்யா-சிரியா கூட்டு ராணுவம் தாக்குதல்- 544 பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்

சிரியா, ஜூலை 7-
சிரியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ரஷ்ய ராணுவத்தின் தலைமையிலான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருபவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பஷார்-அல்-ஆசாத்துக்கு ஆதரவாக, கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் ரஷ்யா ராணுவம், சிரிய ராணுவத்துடன் இணைந்து கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதலில் 130 குழந்தைகள் உட்பட 544 பொது மக்கள் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை நெட்வொர்க் (Syrian Network for Human Rights) தெரிவித்துள்ளது.
மேலும் 2 ஆயிரத்து 117 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ முகாம்கள் இருக்கும் பகுதிகளை ரஷ்யா மற்றும் சிரிய ராணுவம் குறிவைத்து தாக்கி உள்ளதாகவும் சிரிய மனித உரிமை நெட்வொர்க்கின் தலைவர் ஃபடேல் அப்துல் கனி (Fadel Abdul Ghany) தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு அஞ்சி கிட்டத்தட்ட 3 லட்சம் பேர், கடந்த 2 மாதங்களில் சிரியாவில் இருந்து துருக்கி எல்லையில் பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தவில்லை என ரஷ்யா-சிரிய கூட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் சிரியாவில் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் ராணுவத்தினர் மீதும் அல் கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதலை தடுத்து வருவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

Label