OUR CLIENTS
அமெரிக்கா - ஈரான் இடையே சமாதானப் போக்கை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி
அமெரிக்கா - ஈரான் இடையே சமாதானப் போக்கை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி Posted on 07-Jul-2019 அமெரிக்கா - ஈரான் இடையே சமாதானப் போக்கை ஏற்படுத்த பிரான்ஸ் முயற்சி

புதுடெல்லி, ஜூலை 7-

யுரேனிய செறிவூட்டல் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரானை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இறங்கியுள்ளார்.

யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கையில் முனைப்பு காட்டிவரும் ஈரான் அரசு, 2015ம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இருநாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் இருநாடுகளுக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் முயற்சியில் பிரான்ஸ் இறங்கியுள்ளது. ஜூலை 15ம் தேதி இந்த பேச்சு வார்த்தை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் அலுவலகம், அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியுடன் சமாதான முயற்சி குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசியதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து விரிவான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இவ்விவகாரம் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச அணுசக்தி முகமை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Label