OUR CLIENTS
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஹிலரி க்ளிண்டன் - டொனால்ட் ட்ரம்ப் விவாதம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஹிலரி க்ளிண்டன் - டொனால்ட் ட்ரம்ப் விவாதம்! Posted on 06-Sep-2016 அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஹிலரி க்ளிண்டன் - டொனால்ட் ட்ரம்ப் விவாதம்!

வாஷிங்டன்(யு.எஸ்):
2016ம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இரு வேட்பாளர்களும் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சிகள் செப்டம்பர் 7ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.


இந்த தேர்தலில் முதன் முறையாக என்பிசி தொலைக்காட்சியும் , ஈராக் - ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்களும் இணைந்து ' கமாண்டர் இன் சீஃப் ஃபோரம்' என்ற பெயரில் நேரடி விவாதம் நடைபெற உள்ளது, முன்னாள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் மட்டுமே பார்வையாளர்களாக கலந்து கொண்டு அதிபர் வேட்பாளர்களிடம் கேள்விகள் எழுப்புவார்கள்.

என்பிசி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஹிலரி க்ளிண்டனும், டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு, ராணுவ விவகாரங்கள், முன்னாள் வீரர்கள் நலம் சார்ந்த விசயங்கள் ஆகியவற்றை ஒட்டிய கேள்விகள் மட்டுமே இந் நிகழ்ச்சியில் கேட்கப்படும். ஹிலரிக்கும், ட்ரம்புக்கும் அவரவர் ராணுவ விவகார கொள்கைகளை தெரியப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.

அடுத்ததாக செப்டம்பர் 26ம் தேதி முதல் அதிபர் வேட்பாளர் விவாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ம் தேதி துணை அதிபர் வேட்பாளர் விவாதமும், அக்டோபர் 9 மற்றும் 19ம் தேதி மீண்டும் அதிபர் வேட்பாளர்கள் விவாதமும் நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி கடும் போட்டி மாநிலங்களான ஃப்ளோரிடா,அயோவா, ஒஹாயோ இல்லாமலே, ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெறுவார் என என்பிசி தொலைக்காட்சி, கணித்துள்ளது.

Label