OUR CLIENTS
மேட்டூர் அணையை போல், வைகை அணையும் விரைவில் தூர்வாரப்படும்
மேட்டூர் அணையை போல், வைகை அணையும் விரைவில் தூர்வாரப்படும் Posted on 07-Jul-2019 மேட்டூர் அணையை போல், வைகை அணையும் விரைவில் தூர்வாரப்படும்


மதுரை, ஜூலை 7-
 மேட்டூர் அணையை தூர்வாரியது போல், வைகை அணையை தூர்வாரவும் முதலமைச்சர் விரைவில் உத்தரவிடுவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் 50 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை அளித்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்படும் நீர்நிலைகளில் கிடைக்கும் வண்டல் மண் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதி விவசாயிகளே குழு அமைத்து பங்கிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் அம்ரூத் திட்டத்தின் மூலம் அனைத்து வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Label