OUR CLIENTS
அரசு பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ
அரசு பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ Posted on 08-Jul-2019 அரசு பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ


ஈரோடு, ஜூலை 8-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக இனிமேல் ஷூ வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

2017 -& 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப்படும். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

Label