OUR CLIENTS
புதுடெல்லி மேல்சபை தேர்தல் வைகோ, -அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
புதுடெல்லி மேல்சபை தேர்தல் வைகோ, -அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு Posted on 08-Jul-2019 புதுடெல்லி மேல்சபை தேர்தல் வைகோ, -அன்புமணி உட்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு


சென்னை, ஜூலை 8-
புதுடெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. 

இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக் கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.  அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். 

அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியிடுகிறார். இவர்கள் 3 பேரும் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர். 

தி.மு.க. வேட்பாளர் களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய் துள்ளனர். 

மனுக்கள் பரிசீலனை 9-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அ.தி.மு.க. - தி.மு.க. வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். சுயேட்சைகளின் மனுக்கள் 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

Label