OUR CLIENTS
காங், கமிட்டி பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜிநாமா
காங், கமிட்டி பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜிநாமா Posted on 08-Jul-2019 காங், கமிட்டி பதவியிலிருந்து மிலிந்த் தியோரா ராஜிநாமா


மும்பை, ஜூலை 8-
மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை மிலிந்த் தியோரா ராஜிநாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல் காந்தியை டெல்லியில் வைத்து அண்மையில் சந்தித்த மிலிந்த் தியோரா, கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தான் வகித்து வந்த மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.  கட்சியை வலுப்படுத்த தேசிய அளவிலான பொறுப்பை தான் எதிர்நோக்கியுள்ளதால் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், கட்சியில் அனுபவமிக்க 3 பேரை  மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு நியமித்து தேர்தலைச் சந்திக்குமாறும் காங்கிரஸ் தலைமைக்கு மிலிந்த் தியோரா பரிந்துரை செய்துள்ளார்.

Label