OUR CLIENTS
காந்திபீடியா குறித்து நேதாஜியின் பேரன் கருத்து!
காந்திபீடியா குறித்து நேதாஜியின் பேரன் கருத்து! Posted on 08-Jul-2019 காந்திபீடியா குறித்து நேதாஜியின் பேரன் கருத்து!


புதுடெல்லி, ஜூலை 8-
காந்திபீடியா திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சுதந்திர போராட்டம் குறித்த உண்மையான வரலாறுகள் அதில் இடம்பெறவேண்டும் என நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.

காந்தியின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக காந்திபீடியா என்ற திட்டம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கலின்போது தெரிவிக்கப்பட்டது.

என்சைக்ளோபீடியாபோல காந்திபீடியா திட்டம் அமையும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நேதாஜியின் பேரனும், பாஜகவைச் சேர்ந்தவருமான சந்திரகுமார் போஸ், இத்திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், காந்திபீடியாவில் சுதந்திர போராட்ட காலங்களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் குறிப்பிடப்படவேண்டும் எனவும், மறைக்கப்பட்ட வரலாறுகள் திருத்தி எழுதப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Label