OUR CLIENTS
ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறார்கள்!
ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறார்கள்! Posted on 08-Jul-2019 ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறார்கள்!


லூதியானா, ஜூலை 8-
பஞ்சாப் மாநிலம் லூதியானவில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில், ஏராளமான சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், லூதியானாவில் சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த பிரத்யேக போட்டி நடத்தப்பட்டது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் கலந்து கொண்டு, மாநிலங்களின் பாரம்பரிய உடையில் அழகு நடை பயின்றனர். பாடலுக்கு ஏற்ப நடை பயின்று, சிறுவர்கள் நடனமாடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Label