OUR CLIENTS
புதிய வகை பவளப்பாறைகள்
புதிய வகை பவளப்பாறைகள் Posted on 08-Jul-2019 புதிய வகை  பவளப்பாறைகள்


யாழ்ப்பாணம், ஜூலை 8-
இலங்கை கடற்பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறை ஆழ்கடல்பகுதியில், இந்த புதிய வகை பவளப்பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆழ்கடல் பகுதிக்கு சென்ற இலங்கை வடக்கு பிராந்திய, கடற்படையின் நீச்சல் குழுவினர் இந்த அழகிய பவளப்பாறைகளை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே பவளப்பாறைகள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை பவளப்பாறைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வடபகுதி கடற்படை துணை தளபதி பியல்தே சில்வா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வடக்கு பகுதியில் கடலுக்கடியில் உள்ள வளங்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்துள்ள பவளப்பாறைகளின் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Label