OUR CLIENTS
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை-
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை- Posted on 08-Jul-2019 சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை-


சென்னை, ஜூலை 8-
சட்டவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறை அதிகாரிகளை டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரிபாதி, திருச்சியில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி,தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள், டிஐஜிக்கள், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, 8 மாவட்டங்களின் சட்ட ஒழுங்கு பிரச்னை, குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

கள்ளத் தனமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி திரிபாதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹல் தெரிவித்துள்ளார்.

Label