OUR CLIENTS
மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்கப்படுமா?
மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்கப்படுமா? Posted on 08-Jul-2019 மாநிலங்களவை தேர்தல்  வேட்பு மனு ஏற்கப்படுமா?


திருச்சி, ஜூலை 8-
 பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும், வருகிற 19ம் தேதி மனுபரிசீலனையின் போது தெரியவரும் என குறிப்பிட்டார். மேலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருவது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். 

Label