OUR CLIENTS
கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்ய கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்
கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்ய கோரி பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் Posted on 11-Jul-2019 கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்ய கோரி  பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

பெங்களூரு, ஜூலை 11-
கர்நாடக முதல்வர் எச்.டி குமாரசாமி ராஜிநாமா செய்ய கோரி பாஜக எம்.பிக்கள் பெங்களூரில் உள்ள விதான் சவுதா முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் முதல்வர் எச்.டி குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். 

அதை தொடர்ந்து கர்நாடகாவின் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் அதனால் முதல்வர் எச்.டி குமாரசாமி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று பெங்களூரில் உள்ள விதான் சவுதா முன்பு உள்ள காந்தி சிலை அருகே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முதல்வர் குமாரசாமி தன் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்தனர். அவரிடம் கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவரித்தனர்.

முதல்வர் குமாரசாமியின் அரசை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. எனவே குமாரசாமி முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை என்று  என்று ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் எடியூரப்பா தெரிவித்தார்.  மேலும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் சபாநாயகர் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதாக எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Label