OUR CLIENTS
ராகுல் காங். நிர்வாகிகளுடன் அமேதியில் ஆலோசனைஉ.பி. பா.ஜ. அரசு மீது பிரியங்கா பாய்ச்சல்
ராகுல் காங். நிர்வாகிகளுடன் அமேதியில் ஆலோசனைஉ.பி. பா.ஜ. அரசு மீது பிரியங்கா பாய்ச்சல் Posted on 11-Jul-2019 ராகுல் காங். நிர்வாகிகளுடன் அமேதியில் ஆலோசனைஉ.பி. பா.ஜ.  அரசு மீது பிரியங்கா பாய்ச்சல்

புதுடெல்லி, ஜூலை 11
காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உ.பி.யில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக பா.ஜனதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரிகளில் மின்சாரம் துண்டிக்கப் படுவதால் நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள் என்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புகைபடங்களும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி உ.பி.யில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக பா.ஜனதா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு இந்த முறையில்தானா சிகிச்சை அளிக்க வேண்டும்? உ.பி.யில் உள்ள பா.ஜனதா அரசின் பொய்யான வாக்குறுதிகள் மீட்டர் அளவில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரிகளில் மின்சாரம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் புகைப் படங்களையும் வெளி யிட்டுள்ளார்.

Label