OUR CLIENTS
தேடுதல் வேட்டையில் பெண் உள்பட 2 நக்சலைட்கள் பலி
தேடுதல் வேட்டையில் பெண் உள்பட 2 நக்சலைட்கள் பலி Posted on 11-Jul-2019 தேடுதல் வேட்டையில் பெண்  உள்பட 2 நக்சலைட்கள் பலி

போபால், ஜூலை 11-
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பலாகாட் மாவட்டத்தில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பெண் உள்பட இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

மேலாதிக்கவாதிகளின் அடக்கு முறைகளால் பாதிக்கப் படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.  பல்லாண்டு கால மாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டை யாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு. இந்நிலையில்,மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பலாகாட் மாவட்டத்தில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று பின்னிரவு அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் வெடித்த துப்பாக்கிச் சண்டையில் மஞ்சேஷ்(30) மற்றும் நன்டா(22) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  கொல்லப்பட்ட இருவர் மீதும் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Label