OUR CLIENTS
கரைக்கு முட்டையிட வந்த அரியவகை ஆமையை சித்ரவதை செய்த நபர்கள்
கரைக்கு முட்டையிட வந்த அரியவகை ஆமையை சித்ரவதை செய்த நபர்கள் Posted on 11-Jul-2019 கரைக்கு முட்டையிட வந்த அரியவகை ஆமையை சித்ரவதை செய்த நபர்கள்

இந்தோனேஷியா, ஜூலை 11-
இந்தோனேஷியாவில் கடற்கரையில் முட்டையிட வந்த ஆமையை சித்ரவதை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மலோனா என்ற தீவில் அரிய வகையைச் சேர்ந்த மிகப் பெரிய கடலாமை ஒன்று கரைக்கு வந்து முட்டையிட்டது. அதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் உள்பட சிலர் ஆமை மீது ஏறி அமர்ந்து அதனைச் சித்ரவதை செய்தனர்.ஒரு கட்டத்தில் 4 பேர் வரை ஆமை மீது அமர்ந்து அதனைப் பாடாய்படுத்தினர். இறுதியில் கடலை நோக்கிச் சென்ற ஆமையின் வாலைப்பிடித்தும் தங்கள் சித்ரவதையைத் தொடர்ந்தனர்.இதுதொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வீடியோவில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Label