OUR CLIENTS
மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி!
மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி! Posted on 11-Jul-2019 மர்ம காய்ச்சலுக்கு  4 வயது சிறுமி பலி!

வேலூர், ஜூலை 11-
 திருப்பத்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுமி இறந்ததால் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு புகை அடித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியகரத்தை சேர்ந்தவர் தினேஷ்(46) விவசாயி. இவரது மகள் ஸ்வேதா(4). இவருக்கு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவரது பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்வேதாவை இரவு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்களை கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சிறுமி ஸ்வேதாவுக்கு காய்ச்சல் வந்த உடனே சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தி உள்ளனர். கொசுக்களினால் ஏற்படும் மர்ம காய்ச்சலால் இறந்திருக்கலாம். அவரது ரத்த மாதிரிகள் எடுத்து. ஆய்வுக்கு அனுப்பி பின்னர் வரும் அறிக்கையில் தான் சிறுமி எந்த நோயினால் இறந்திருக்கிறார் என தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதையடுத்து, திருப்பத்தூர் சுகாதாரத்துறை அலுவலர்கள் பெரியகரத்தில் முகாமிட்டு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கொசு ஒழிப்பு புகை அடித்து வருகின்றனர்.

Label