OUR CLIENTS
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பெண் உட்பட 8 பேர் கைது!
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பெண் உட்பட 8 பேர் கைது! Posted on 11-Jul-2019 குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பெண் உட்பட 8 பேர் கைது!

வேலூர், ஜூலை 11-
 வேலூர் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த திருவலம் அம்மூண்டியை சேர்ந்த பாலமுருகன்(35), பெரியதகரகுப்பத்தை சேர்ந்த திவாகர்(23), வழிப்பறியில் ஈடுபட்ட சதுப்பேரியை சேர்ந்த புலிகேசி(24), சைதாப்பேட்டையை சேர்ந்த அப்துல்லா(27), கரிகிரியை சேர்ந்த சூரியா(27), கள்ளச்சாராயம் விற்பனை செய்த நாட்றம்பள்ளியை சேர்ந்த மகி(39), வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் கக்கூர்(34), இந்தியா நகரை சேர்ந்த பெண் சூரியா(44) ஆகியோர் கடந்த மாதம் மாவட்ட தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது தலா 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு, எஸ்.பி., பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர்.

Label