OUR CLIENTS
எம்.வி.குப்பம் ஊராட்சியில் தொடர்ந்து தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை!
எம்.வி.குப்பம் ஊராட்சியில் தொடர்ந்து தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை! Posted on 11-Jul-2019 எம்.வி.குப்பம் ஊராட்சியில் தொடர்ந்து தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை!

பேர்ணாம்பட்டு, ஜூலை 11-
 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மேல்வழித் துணையாங் குப்பம் என்கிற எம்.வி. குப்பம் ஊராட்சியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக இங்கு ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த ஸ்ரீராம் என்பவர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்குச் சென்று விட்டார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நெருங்குகிறது. 

இதுவரை புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படவில்லை. அதனால் சொக்கரிடிகுப்பம் ஊராட்சி செயலாளராக துரைசாமியை கூடுதலாக கவனித்து கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எம்.வி. குப்பத்தில் தற்போது கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம் எந்நேரமும் பூட்டியே இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வெறும் உப்புநீர் மட்டுமே விநியோகிப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகிறார். மேலும் அந்த உப்பு நீரைக்கூட சரியாக விநியோகம் செய்வதில்லையாம். 

தெருமின் விளக்குகள் சரிவர எரிவதில்லை, எம்.வி.குப்பம் ஊராட்சியே மிகவும் வறட்சிப்பகுதியாக உள்ளது. இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமாரிடம் இப்பகுதி மக்கள் பலமுறை தங்கள் பகுதியின் குறைகளை எடுத்துக்கூறினர். ஆனால் சரவணகுமார் கேட்டுக்கொள்வதோடு சரி, நடவடிக்கை எடுக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிலேயே மிகவும் மெத்தனமாக செயல்படக்கூடிய அளவுக்கு மந்தமான ஆசாமி. மேலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள பன்னீர்குட்டைக்குச் சென்றுவரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. 

எம்.வி. குப்பம் பகுதி மக்கள் இவ்வளவு அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதுகுறித்து மேலதிகாரிகளாவது உரிய விசாரணை நடத்தி ஊராட்சியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து எம்.வி. குப்பம் பகுதி மக்கள் நிம்மதியுடன் வாழ வகை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label