OUR CLIENTS
ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை!
ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை! Posted on 11-Jul-2019 ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை!

விழுப்புரம், ஜூலை 11-
ரயில் நிலைய நடைமேடை குடிநீர் குழாயில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அதை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என ஒரு சிறுவன் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதையடுத்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, ரயில்வே அங்கீகாரம் பெற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், தனி நபர்கள் யாரேனும் போலீயாக குடிநீர் விற்பனை செய்கின்றார்களா என போலீசார் ஆய்வு செய்தனர்.

Label