OUR CLIENTS
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் விவசாய பணிகளுக்கு இடையூறு!
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் விவசாய பணிகளுக்கு இடையூறு! Posted on 11-Jul-2019 தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்  விவசாய பணிகளுக்கு இடையூறு!

பொன்னேரி, ஜூலை 11-
நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களி, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாய பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதால் விவசாயிகள் சிரமத்திற்கும், அசம்பாவிதங்களை எண்ணி அச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர்.

பொன்னேரி அடுத்த ஆவூர் மேட்டுகாலனி பகுதியில் சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக கொண்டு செல்லப்படும் மின் ஒயர்கள் தாழ்வாக உள்ளன.அங்குள்ள மின்கம்பங்களுக்கு இடையேயுள்ள மின் ஒயர்கள் கைக்கு எட்டும் உயரத்தில் இருப்பதால் நடவு, களை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விவசாய பணிகளின் போது கம்பு வைத்து மின் ஒயர்களை தூக்கி நிறுத்தி மேற்கொள்ள வேண்டி உள்ளது. உழவு, அறுவடை பணிகளின்போது டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. நடவு மற்றும் களைப் பணிகளுக்கு வரும் விவசாய தொழிலாளர்களும் அச்சத்துடன் பணி செய்கின்றனர். மெதூர் துணை மின் நிலையத்தில் இது தொடர்பாக விவசாயிகள் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.

விவசாய பணிகளின்போது அசம்பாவிதங்கள் நேரிட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்க்க மேற்கண்ட கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Label