OUR CLIENTS
குளம் தூர்வாரப்படுவது எப்போது?
குளம் தூர்வாரப்படுவது எப்போது? Posted on 11-Jul-2019 குளம் தூர்வாரப்படுவது எப்போது?

பூவிருந்தவல்லி, ஜூலை 11-
 சென்னை  திருவெற்றியூர் அடுத்த மணலி காவல் நிலையம் எதிரே உள்ள  குளம்  தற்போது மழை இல்லாத காரணத்தினால் காய்ந்து வறண்டு கிடக்கிறது. தற்போது இந்த குளத்தில் குப்பைகளும் முள் புதர்களும்  அதிக அளவில் தேங்கி உள்ளது.

விரைவில் பருவமழை பெய்ய உள்ளது. அப்போது வரும் மழைநீரை சேமிப்பதற்காக இந்தக் குளம் சுத்தம் செய்யப்படுமா? இந்த குளத்தை அரசு சுத்தம் செய்யுமா? அல்லது சமூக ஆர்வலர் சுத்தம் செய்வார்களா ? இல்லை இந்த குளத்தை ஏதாவது ஒரு நிறுவனம்  தத்து எடுக்குமா? இந்த குளத்தை தூர் வாரும் பணியை உடனடியாக செய்தால் மழைநீர் சேமிக்க  பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மழை வரும் முன்பு குளம் தூர்  வாரப்படுமா?. அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label