OUR CLIENTS
20 அடி ரோடு 10 அடியாக சுருங்கியது எப்படி?
20 அடி ரோடு 10 அடியாக சுருங்கியது எப்படி? Posted on 08-Jul-2019 20 அடி ரோடு 10 அடியாக சுருங்கியது எப்படி?

வேலூர், ஜூலை 11-
காட்பாடி வள்ளிமலை ரோட்டில்  லக்ஷ்மி நகரில் 20 அடி ரோடு 10 அடி ரோடாக ஆக்கிரமிக்கப்பட்டு சாலை சுருங்கியுள்ளது. வருவாய்த்துறையும், வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை ரோட்டில் லக்ஷ்மி நகரில் 20 அடி சாலை 10 அடி சாலையாக சுருங்கியுள்ளது. தெரு ஆரம்பத்திலேயே மாட்டுக் கொட்டகையாக தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவில்லை. மாறாக இந்த வழியில் இருசக்கர வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. அத்துடன் பொக்லைன் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. 

இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்து பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும், வாகனங்களும் சிரமமின்றி சென்று வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label