OUR CLIENTS
அத்திவரதரை 10 லட்சம் பேர் வழிபட்டுள்ளதாக அறிவிப்பு
அத்திவரதரை 10 லட்சம் பேர் வழிபட்டுள்ளதாக அறிவிப்பு Posted on 11-Jul-2019 அத்திவரதரை 10 லட்சம் பேர் வழிபட்டுள்ளதாக அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூலை 11-
காஞ்சி அத்திவரதரை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வழிபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் பத்தாவது நாளை எட்டியுள்ளது. நேற்று, பால் வண்ணமும், ரோஸ் வண்ணமும் கலந்த பட்டாடையில் அத்திவரதர் அலங்கரிக்கப்பட்டுள்ளார். அத்திவரதரைக் காண பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு காத்துக் கிடக்கின்றனர்.

அத்திவரதர் உற்சவம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை வழிபடுவதற்கான நேரம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் மட்டும் ஆனி கருட சேவையை முன்னிட்டு மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Label