OUR CLIENTS
ஜூலை 12ம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்கிறார் குடியரசுத்தலைவர்
ஜூலை 12ம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்கிறார் குடியரசுத்தலைவர் Posted on 11-Jul-2019 ஜூலை 12ம் தேதி அத்திவரதரை தரிசனம் செய்கிறார் குடியரசுத்தலைவர்

புதுடெல்லி, ஜூலை 11-
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வருகிற 12ம் தேதி காஞ்சி அத்திவரதரை வழிபட வருக தர உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக வருகிற வெள்ளிக் கிழமை அன்று குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார்.  வெள்ளி கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னை வரும் அவர், 3 மணி தொடங்கி 4 மணிக்குள்ளாக காஞ்சி அத்திவரதரை தரிசிக்க உள்ளார்.

குறிப்பிட்ட அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையாநாயுடு வழிபாடு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காஞ்சி அத்திவரதரை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வழிபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்திவரதரை வழிபடுவதற்கான நேரம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் ஆனி கருட சேவையை முன்னிட்டு மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க போலி டோனர் பாஸ் அட்டைகளை வைத்துக் கொண்டு பலர் அத்திவரதர் தரிசனத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நன்கொடையாளர்களுக்கான அந்த அட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Label