OUR CLIENTS
சினிமா அரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை-ஓவியா
சினிமா அரசியலுக்கான பயிற்சி மையம் இல்லை-ஓவியா Posted on 11-Jul-2019 சினிமா அரசியலுக்கான  பயிற்சி மையம்  இல்லை-ஓவியா

சினிமா அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி: மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக நடித்தது அரசியலுக்கு வருவதற்கான பயிற்சியா?

சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம்ன்னு நினைக்கிறீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமால கொஞ்சம் பிரபலமானா உடனே அரசியலுக்கு வர்றது. எனக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது. ஓவியா ஆர்மியை நான் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் வருவேன்.

அரசியலுக்கு வந்தால் கேரள அரசியலில் நுழைவீர்களா? இல்லவே இல்லை. எனக்கு தமிழ்நாடு தான் எல்லாம். இந்த மாநிலத்தை விட்டு எங்கும் செல்லமாட்டேன். தமிழர்கள் கொடுத்த வாழ்க்கை இது. நான் நல்லது செய்வதாக இருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். தமிழ் ரசிகர்கள் தான் எனக்கு அதிகம்.

Label