OUR CLIENTS
டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை
டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை Posted on 11-Jul-2019 டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை

இத்தாலி, ஜூலை 11-
இத்தாலியில் நடைபெற்ற உலக யுனிவர்சிட்டி போட்டியில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

உலக யுனிவர்சிட்டி போட்டியில் டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை, இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரில் உலக யுனிவர்சிட்டி போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்தியா சார்பில் டுட்டி சந்த் பங்கேற்றார். அவர் பந்தைய தூரத்தை 11.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். டுட்டி சந்த் யுனிவர்சிட்டி போட்டியில் இதற்கு முன் எந்தவொரு இந்திய வீரர்& வீராங்கனையும் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது கிடையாது.  11.41 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டுட்டி சந்த், 11.32 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அஜ்லா டெல் போன்ட்டே 10.33 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Label