OUR CLIENTS
சரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு!
சரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு! Posted on 11-Jul-2019 சரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை  அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு!

மீஞ்சூர், ஜூலை 11-
அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்தில் பயணியர் வந்து செல்லும் பாதை மேடும் பள்ளமுமாக இருப்பதால் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் இயலாதவர்கள் அங்குள்ள நடைமேம்பாலத்தினை பயன்படுத்த முடியாமல் ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். இவர்கள் நடைமேடைகளின் கடைசி பகுதிக்கு சென்று தண்டவாளங்களை கடக்கின்றனர். இதில் ரயில் நிலையத்தில் இருந்து அத்திப்பட்டு புதுநகர் பஜாருக்கு செல்லும் பகுதி மேடும் பள்ளமுமாக இருப்பதால் பயணியர் பெரும் சிரமத்துடன் அப்பகுதியை கடக்கின்றனர். நடைமேம்பாலங்களை பயன்படுத்த முடியாத பயணியர் சிரமம் கருதி நடைமேடை கடைசிப் பகுதியில் தண்டவாளங்களை எளிதாக கடந்து செல்ல கற்கள் மற்றும் படிக்கெட்டுகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label