OUR CLIENTS
ரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்!
ரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்! Posted on 11-Jul-2019 ரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்!

சென்னை, ஜூலை 11-
பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கியதால் ரேஷன் பொருட்கள் வேண்டாம் என அரசுக்கு விட்டு கொடுத்தவர்களும் தற்போது மீண்டும் அவற்றை வாங்கி வருகின்றனர். 

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாதவர்கள், தங்கள் கார்டை, தெரிந்தவர்களிடம் வழங்கி, பொருட்கள் வாங்கி கொள்ளுமாறு கூறுகின்றனர். இதை தடுக்க, அவற்றை, அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியை, உணவு துறை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் பலரும் தங்களின் பொருட்களை அரசுக்கு விட்டு கொடுத்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் பொருட்களை திரும்ப வாங்க தொடங்கியுள்ளனர். இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. பொது விநியோக திட்ட இணைய தளத்தில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கும் நிரந்தரமாகவும் அரசுக்கு விட்டு கொடுக்கலாம். மேலும் அரிசி, சர்க்கரை உட்பட எந்த பொருட்கள் வேண்டாம் என்றாலும் அதை மட்டும் தனியாக கூட விட்டு தரலாம். தேவை ஏற்படும் போது மீண்டும் தங்களின் பொருட்களை பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் விரையமாவது தடுக்கப்பட்டது. அதிக விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரேஷன் பொருட்களை அரசுக்கு விட்டு கொடுத்தனர். 

இந்த சூழலில் ரேஷனில் பொங்கலுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இதனால் ஆர்வமாக பொருட்களை விட்டு கொடுத்த பலரும் தங்களுக்கு 1,000 ரூபாய் உட்பட அரசு சலுகைகள் கிடைக்காது என்று கருதி மீண்டும் பொருட்களை பெற விண்ணப்பித்து வருகின்றனர். 

இதனால் 2,000 பேர் தான் பொருட்களை விட்டு கொடுத்துள்ளனர். பொருட்களை விட்டு கொடுப்பதற்கும் அரசு வழங்கும் சலுகைகள் கிடைப்பதற்கும் தொடர்பில்லை. தகுதியான நபர்களுக்கு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Label