OUR CLIENTS
வீடூர் அணையை தூர்வாரி எல்லைக்கல் நடப்படுமா?
வீடூர் அணையை தூர்வாரி எல்லைக்கல் நடப்படுமா? Posted on 11-Jul-2019 வீடூர் அணையை தூர்வாரி  எல்லைக்கல் நடப்படுமா?

விழுப்புரம், ஜூலை 11-
வீடூர் அணையை தூர்வாரி அளவீடு செய்து எல்லைக் கற்கள் நட வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் மிகப்பெரிய நீர் தேக்கமாக வீடூர் அணை கட்டு பகுதி உள்ளது. இந்த அணை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இந்த அணையின் நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த் துறையினர் பெயருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை தூர் வாராமல் விட்டதால் மறுபடியும் பயிர் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த அணையின் நிலப்பகுதியை முழு அளவீடு செய்து உயரமான எல்லை கற்களை பதிக்க வேண்டும். 

அணையில் தற்போது இருபுறம் மட்டுமே கரை உள்ளது. இதில் உள்ள மண்ணை வெட்டி சுற்றிலும் அணைக்கு கரை மடித்தால் ஆக்கிரமிப்புகளை தடுப்பதோடு அதிக நீரை சேமிக்க முடியும். நிலத்தடி நீரும் குறையாமல் இருக்கும்.  எனவே இந்த அணையை தூர் வாரி சுற்றிலும் எல்லைக் கற்களை பதிக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label