OUR CLIENTS
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று ரயிலில் குடிநீர் விநியோகம்
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று ரயிலில் குடிநீர் விநியோகம் Posted on 12-Jul-2019 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு  இன்று ரயிலில் குடிநீர் விநியோகம்

சென்னை, ஜூலை 12
ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் இன்று முதல் குடிநீர் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் 21ம் தேதி ரூ.65கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 50 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் ஜோலார்பேட்டைக்கு வந்து சேர்ந்தது. ஒவ்வொரு வேகனுக்கும் 2 பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு மொத்தம் 100 பேர் தண்ணீரை ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் சோதனை ஓட்டமும் முடிந்தது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு இன்று முதல் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளது.

Label