OUR CLIENTS
குரூப் -4 தேர்வு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
குரூப் -4 தேர்வு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு Posted on 12-Jul-2019 குரூப் -4 தேர்வு கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 12-
குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்வதில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சக்கரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், பொறியியல் பட்டதாரியான தான், வருவாய்த்துறை உதவியாளர் பணியிடத்துக்கு, டி.என்.பி.சி தேர்வில் வெற்றிபெற்றும் கூடுதல் கல்வித்தகுதி எனக்கூறி தன்னை நிராகரித்து விட்டதாகவும், இதனை ரத்து செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளதால், பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்றும், இவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாய் இருக்கும் நிலையில், பணிக்குத் தேர்வான பின், அவர்கள் முறையாக பணியாற்றுவதில்லை எனவும், கூடுதல் கல்வித்தகுதி என்பதால் அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் சிரமத்தை சந்திக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழல் உயர் நீதிமன்றங்களிலும் உள்ளதாகவும், இரண்டாம் நிலை காவலர்களாகவும் பட்டதாரிகள் தேர்வாகின்றனர் எனவும் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுகின்றனர் எனவும் இதனால் பணிகளை முறையாகச் செய்வதில்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு நிராகரிக்கப்படுகிறது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Label