OUR CLIENTS
பட்டாசு பாதுகாவலன் முதல்வர் பழனிசாமி-ராஜேந்திர பாலாஜி
பட்டாசு பாதுகாவலன் முதல்வர் பழனிசாமி-ராஜேந்திர பாலாஜி Posted on 12-Jul-2019 பட்டாசு பாதுகாவலன் முதல்வர்  பழனிசாமி-ராஜேந்திர பாலாஜி

சென்னை, ஜூலை 12-
பட்டாசு பாதுகாவலன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தமிழ்நாட்டில் பட்டாசு தொழிலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று தொழில் துறை மற்றும் சிறு குறு தொழில் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு தொழிலாளர்களுடைய பிரச்சனை, அவர்கள் படும் சிரமங்களை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நான் அறிந்ததை விட, அதே மாவட்டத்தை சேர்ந்த ராமசந்திரன் அறிந்ததை விட நன்கு அறிந்தவர் பச்சை தமிழனான எடப்பாடி பழனிசாமி தான் என பேசினார். பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஒரு பிரச்சனை என்று வந்ததும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாட திறமையான வழக்கறிஞர்களை நியமித்ததோடு, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச தமிழகத்தில் இருந்து 10 அமைச்சர்களை அனுப்பி வைத்து, பட்டாசு தொழிற் சாலைகளின் பிரச்சனையை சட்ட ரீதியாக அணுகி சாதகமான தீப்பை முதல்வர் பெற்று தந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பட்டாசு பாதுகாவலனான எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தமிழ்நாட்டில் பட்டாசு தொழிலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட கூறியிருக்கிறார். 

Label