OUR CLIENTS
புதிய தொழிற் கொள்கையால் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது தமிழகம்
புதிய தொழிற் கொள்கையால் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது தமிழகம் Posted on 12-Jul-2019 புதிய தொழிற் கொள்கையால் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது தமிழகம்

சென்னை, ஜூலை 12-
புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேரவையில் தெரிவித்தார்.

தொழில்துறை மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியகோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்றது. இதில் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தமிழகத்தில் உள்ள தொழில் வளர்ச்சியின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகத்தில் புதிய தொழிற் கொள்கை மூலம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஊரகத்தொழில் துறை அமைச்சர், மத்திய அரசின் நீம் திட்டத்தின் கீழ ஊரக பகுதிகளில் புதியதாக 14 ஆயிரத்து 500 வேலைவாய்ப்புகளும், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தமிழகத்திலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதாக திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் விரிவாக்கத்திற்காகவே வேறு மாநிலங்கள் செல்வதாகக் குறிப்பிட்டார்.

Label