OUR CLIENTS
அதிமுக சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து வருகிறது
அதிமுக சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து வருகிறது Posted on 12-Jul-2019 அதிமுக சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்து வருகிறது


சென்னை, ஜூலை 12-
தமிழகத்தில் முதலீடு வரும் ஆனால் வராது என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதிமுக அரசு சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாதையும் செய்து வருவதாக பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டில், தொழில் தொடங்க முன்வந்த முதலீட்டாளர்களுக்கு 2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும், எனவே இன்னும் 4 ஆண்டுகள் அவகாசம் உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேரவையில் தெரிவித்தார். திமுக ஆட்சி வரும். ஆனால் வராது என ஜெயக்குமார் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, முதலீடுகள் வரும். ஆனால் வராது. என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாங்கள் சொல்வதையும் செய்கிறோம் சொல்லாததையும் செய்கிறோம் எனக் குறிப்பிட்டார். தமிழகம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குவதால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நாடி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

Label