OUR CLIENTS
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 29% ஊதிய உயர்வு
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 29% ஊதிய உயர்வு Posted on 12-Jul-2019 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 29% ஊதிய உயர்வு

சென்னை, ஜூலை 12-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 29 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என செய்யாறு எம்எல்ஏ தூசி கே மோகன்கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  மொத்தம் 20 ஆயிரத்து 28 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, போனஸ், பொங்கல் சிறப்பு தொகை, கருணை தொகை உள்ளிட்டவை வழங்கப் படுவதாகவும் அமைச்சர் கூறினார்.இது தவிர ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 6 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றியமைக்கப்படுவதாக கூறிய அமைச்சர் காமராஜ், இன்று முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29 சதவீத ஊதியம் உயர்த்தி தரப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Label