OUR CLIENTS
மின்பளு உள்ள பகுதிகளில் துணை மின் நிலையங்கள்
மின்பளு உள்ள பகுதிகளில் துணை மின் நிலையங்கள் Posted on 12-Jul-2019 மின்பளு உள்ள பகுதிகளில் துணை மின் நிலையங்கள்


சென்னை, ஜூலை 12-
மின்பளு அதிகம் உள்ள பகுதிகளில் இடம் கிடைக்கும் பட்சத்தில் துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் 507 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விருதுநகரில் அதிக மின்திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

 சில இடங்களில் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளும் இருப்பதால் மின்பளு அதிகரித்து தொழிற்சாலைகளுக்கு  பாதிப்பு ஏற்படுகிறது என கூறிய அமைச்சர், இதை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 

Label