OUR CLIENTS
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை Posted on 12-Jul-2019 சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை

சென்னை, ஜூலை 12-
சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்படியாக பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன் கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க பல்வேறு போராட்டங்களை நடத்திய மார்ஷல் நேசமணி பற்றி குறிப்பிட்டார். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை, பாடத்திட்டத்தில் படிப்படியாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

அதன் அடிப்படையில் மார்ஷல்நேசமணியின் வாழ்க்கை வரலாறும் அரசு பாடத்திட்டத்தில் இடம் பெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Label