OUR CLIENTS
சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம்
சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம் Posted on 12-Jul-2019 சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம்


சென்னை, ஜூலை 12-
தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-வர் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். உடனே சபாநாயகர் குறுக்கிட்டு ஆஸ்டின் பேசியது அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

சட்டசபையில் ஒரு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பவும், விளக்கம் கேட்கவும் உரிமை உண்டு. 110-வது விதியில் முதல்வர் பேசும்போது யாரும் அதில் குறுக்கிட கூடாது. விமர்சிக்க கூடாது என்று விதி உள்ளது. அதுபற்றி யாரும் விவாதிக்க கூடாது. எனவே அவர் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறேன். 

முதல்வர் 110-வது விதியின்கீழ் அறிவிப்பதை மற்ற அமைச்சர்கள் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் ஒரு உறுப்பினர் கருத்து சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது. 110-வது விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். 

அதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அவர் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். 110- வது விதியின் கீழ் முதல்-வர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று நான் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறேன். அதை ஏற்க வேண்டும். விமர்சிக்க கூடாது. நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. ‘பாயிண்ட் ஆப் ஆர்டரை’ ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது. விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக் கூடாது. 

நன்றி தெரிவித்து மட்டும் பேசலாம். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறியதால் தான் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. -சபை நடைபெறும் போது அது திசை மாறி விடக்கூடாது என்பதற்காக தான் உறுப்பினர்கள் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு. இதை அவைத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Label