OUR CLIENTS
பிரிட்டிஷ் கப்பல் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை இடையூறு?
பிரிட்டிஷ் கப்பல் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை இடையூறு? Posted on 12-Jul-2019 பிரிட்டிஷ் கப்பல் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை இடையூறு?

பிரிட்டன், ஜூலை 12- 
ஹர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டிஷ் கப்பலுக்கு ஈரானியப் படகுகள் தொல்லை கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்தை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல் என்று  ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஹர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையை சேர்ந்த 5 கப்பல்கள் மறித்ததாக கூறப்படுகிறது.

தங்கள் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை கப்பல்கள் தொந்தரவு கொடுத்ததாகவும் பிறகு தங்கள் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்து குறி வைத்த பிறகு ஈரான் கடற்படை கப்பல்கள் விலகிச் சென்றதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.  

Label